Friday,January 25, 2013
இலங்கை::வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்ட வாகனம் ஒன்று இன்று அதிகாலை 5 மணியளவில் வெல்லாவெளி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் மண்டூர் வெல்லாவெளி வீதியில் கருத்த பாலத்துக்கு அருகே வீதியில் வெள்ளநீர் பாய்வதால் மத்திய முகாமிலிருந்து அநுராதபுரம் செல்வதற்காக இவ்வீதியால் வந்த வாகனமொன்று வெள்ள நீரில் அடித்துச் செல்லபட்டுள்ளது.
கிராம மக்களின் உதவியுடன் வெல்லாவெளி பொலிஸார் வாகனத்தை மீட்டதுடன் அதில் பயணித்த 24 பேரையும் காப்பாற்றியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த லியனகே தெரிவித்தார்.
மீட்கப்பட்டவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பபடுகிறது.

No comments:
Post a Comment