Saturday, December 15, 2012
இலங்கை::2009 இல் இலங்கையில் இருந்து புலிபயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து பலர் நஷ்டவாளிகள் ஆகியியுள்ளனர். உலகளாவிய ரீதியில் புலிகளுடன் சட்டவிரோதமாக வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை கொண்டுநடத்துபவர்களுக்கு புலிகள் இல்லாதொழிக்கப்பட்டமை அவர்களை வீதிக்கிறக்கியது போலாயிற்று. போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் ஆயுதக்கடத்தல் மூலம் மில்லியன் கணக்கான பணத்தை இவர்கள் சம்பாதித்து சொகுசு வாழ்கையை அனுபவித்து வந்தனர்.
புலிகளின் தூதரகங்கள், மில்லியன் கணக்கான டொலர்களை நாளாந்தமும், மாதாந்தமும் மற்றும் வருடாந்தமும் புலம்பெயர் மக்கள் மூலம் திரட்டி வந்தனர். இம் மக்களில் சிலர் தமது சொந்தப் பணத்தை விருப்பத்திலும் மற்றும் சிலர் வலுக்கட்டாயத்தின் பெயரிலும் செலுத்தி வந்தனர். இதைத்தவிர பயங்கரவாதிகளுக்கு மேலும் பல வழிகள் வருமாணம் திரட்டுவதற்கு இருந்து வந்தது.
இவ்வாறு கிடைக்கப் பெறும் வருமாணங்களை பயன்படுத்தி இப் பயங்கரவாதிகள் தம்மை பலப்படுத்திக்கொண்டு பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு நாட்டின் இறையான்மையை முற்றாக சீர் குழைத்தனர்.
பயங்கரவாதிகள் முற்றாக தோற்றக்கடிக்கப்பட்ட பின்னர் இவர்கள் ஆரதவு சக்திகள் நஷ்டவாளிகள் ஆகி தமது இலாபத்தை முற்றாக இழந்தனர். இருப்பினும் இலங்கையில் வாழ்ந்த அனைத்து இன மக்களும் தற்கொலை குண்டு தாக்குதல், குண்டு வெடிப்பு, சிறுவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பு, இறப்பு மற்றும் அனைத்து அழிவுகளிலும் இருந்து சுகந்திரம் பெற்றனர். அதனைத்தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட சமாதானத்தில் மூலம் வடக்கில் வாழும் மக்கள் நிரந்தர நிம்மதியையும், சுகந்திரத்தையும், சந்தோஷத்தையும் பெற்றுக்கொண்டனர். நாடு பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகின்றது.
இலங்கையில் சமாதானம் ஏற்பட்டதால், தமது வருமாணத்தை முற்றாக இழந்த பயங்கரவாத ஆதரவு சக்திகள் இலங்கைக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் இலங்கையில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்த முனைந்து வருகின்றனர். இதில் ஒர் அங்கமே இவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களையும், சமாதானத்திற்கு எதிரானவர்களையும் ஒன்று திரட்டி இலங்கைக்கெதிராக செயற்பட்டு வருகின்றனர்.
புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர்ந்தவர்களின் குழுக்கள், வேறு சில செல்வாக்குள்ள நிறுவனங்களை தம்முடன் இணைத்துக் கொண்டு இலங்கைக்கெதிராக செயற்பட்டு வருவதால் அந் நிறுவனங்களும், புலம்பெயர் ஆதரவாளர்களும் பாரியளவு இலாபமீட்டி வருகின்றமை தெட்டத் தெளிவாக புலப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் இலங்கைக்கெதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக இவர்கள் புலிகளின் பாணியை கையாண்டு வருகின்றனர். இவர்களது நடவடிக்கைகளை பார்க்கும் போது, இதில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் ஆதரவு சக்திகள் யாவும் புலிகளி கூலிப்படைகள் போன்றே செயற்பட்டு வருகின்றனர்.
கீழ்காணும் வரைபடத்தின் மூலம் புலிகளை பின் தொடர்பவர்களுடன் அதன் இலாபமீட்டு நிறுவனங்களும் இணைந்து செயற்படும் கபடத்தனமான நோக்கங்கள் தெளிவாகின்றது.
No comments:
Post a Comment