Thursday, December 13, 2012
இலங்கை::ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்த புலி கொலையாளி தமிழ் பெண்ணொருவருக்கு 20 வருடகால சிறைத்தண்டனை விதித்து கேகாலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ராசலிங்கம் தாமரைவதனி என்ற பெண் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி வரை கேகாலை பகுதியில் உள்ள ஹோட்டலில் ஒன்றில் இருந்து அமைச்சரை கொல்வதற்கு திட்டம் வகுத்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு குற்றத்தடுப்புப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கபட்டு விசாரணைகள் இடம்பெற்று கேகாலை நீதிமன்றுக்கு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்தே குறித்தப் பெண்ணுக்கு 20 வருடசிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment