Monday, October 1, 2012

புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் சிவில் பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்!

Monday, October 01, 2012
இலங்கை::புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் சிவில் பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களை பாதுகாப்பு பிரிவில் இணைக்கும் வைபவம் இன்று கிளிநொச்சியில் இடம்பெறும்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைந்து கொள்வதற்கு விண்ணப்பித்தவர்களில் முதற்கட்டமாகவே 2 ஆயிரம் இவ்வாறு பேர் இன்று இணைக்கப்படுவதாக சிவில் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 5 ஆயிரம் பேரை சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்து அவர்களை வடபகுதியின் அபிவிருத்திக்கும் பயன்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்துக்கு அமைய 2000ற்கும் அதிகமான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடத்தி தெரிவுசெய்யப்படுபவர்ளுக்கு நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது எனவும் மேஜர் மென்டிஸ் குறிப்பிட்டுள்ளார். சிவில் பாதுகாப்புப் படையில் இவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். இவர்களுக்கு மாதாந்தம் 18 ஆயிரம் ரூபாவுக்கும் குறையாத ஊதியம் வழங்கப்பட விருப்பதுடன், ஏனைய வசதிகளும் இவர்களுக்குச் செய்துகொடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment