Wednesday, August 29, 2012
இலங்கை::கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் நிந்தவூர், அட்டப்பளம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனைக்குடியை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் 6 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இக்கோர சம்பவம் செவ்வாய்க்கிழமை (28) இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் பயணம் செய்த ஆட்டோ வாகனம் மீது பின்னால் அதி வேகமாக வந்த தனியார் சொகுசு பஸ் ஒன்று மோதியதன் காரணமாகவே இவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.இவர்கள் கல்முனைக்குடி 13 புதிய வீதியை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்களாவர். மூன்று பெண்கள், இரு சிறுவர்கள் ஆகியோருடன் ஆட்டோ சாரதியும் உயிரிழந்துள்ளார்.ஒரே குடும்ப சகோதரிகளான எம்.எச்.ஜெமினா (வயது 35), எம்.எச்.இர்பானா (24), எம்.எச்.றிஹானா (26), இவரது புதல்வர்களான அக்தாஸ் அஹமட் (ஒன்னரை வயது), அம்ஹர் அஹமட் (இரண்டரை வயது,மற்றும் ஆட்டோ சாரதி எம்.இஸதீன் (50) ஆகியோரே மரணித்துள்ளனர்.இவர்களது ஜனாசாக்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளன..
குறித்த பஸ் கல்முனை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சொகுசு பஸ் கொழும்பு செல்வதற்காக அக்கரைப்பற்றில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அதற்கு முன்னாள் சென்ற ஆட்டோவை மோதி அடித்து, அதன் மேல் ஏறி சுக்கு நூறாக்கியுள்ளது. இதனால் குறித்த ஆட்டோ முற்றாக நசுங்கி தூளாகியுள்ளது. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களும் பலந்த சேதமடைந்துள்ளன.

No comments:
Post a Comment