Friday, August 17, 2012
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 30 பேர் தங்காலை கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்காலையில் இருந்து 300 கடல் மைல் தொலைவில் மீன்பிடி படகொன்று அனர்த்தத்திற்கு இலக்காகியுள்ளதாக கிடைத்த தகவலின் பிரகாரம் அவர்களைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் வர்ணகுலசூரி குறிபிட்டார்.
இதற்கமைய அந்த படகிலிருந்து சுமார் 30 பேர் காப்பாற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கூறினார். இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முற்பட்டவர்கள் என்பதால் அவர்களை கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஜீலை மாதம் 18ஆம் திகதி இந்த குழுவினர் அவுஸ்திரேலியா நோக்கப் பயணித்தை ஆரம்பித்துள்ளமை தெரியவந்துள்ளது. ஆரம்ப கட்ட விசாரணைகளை அடுத்து இந்த குழுவினரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment