Tuesday, July 03, 2012இலங்கை::இலங்கைக்கு வெளிநாட்டு நிதியுதவிகளை வழங்குவதில் கடந்த ஆண்டில் முன்னிலை வகித்த சீனாவை பின் தள்ளிவிட்டு, இந்தியா அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளது.2012ம் ஆண்டின் முதல் 4 மாதங்களிலும் இலங்கைக்கு மொத்தம் 1015 மில்லியன் டொலர் வெளிநாட்டு நிதியுதவிகள் கிடைத்துள்ளதாக இலங்கையின் அதிகாரபூர்வ புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இந்த ஆண்டில் இந்தியா மட்டும் 740.8 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதில் 275.1 மில்லியன் டொலர் நன்கொடையாகும்.
இலங்கையின் அண்மைய வரலாற்றில் வழக்கத்துக்கு மாறாக கிடைத்துள்ள மிகப்பெரிய நன்கொடை இதுவாகும்.
இதன்மூலம் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் 49,000 வீடுகள் கட்டப்படவுள்ளன.
ஜப்பான் 12.6 மில்லியன் டொலர் நன்கொடை உள்ளிட்ட 175.3 மில்லியன் டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
மூன்றாவது இடத்தில் நெதர்லாந்து உள்ளது. இந்தநாடு 102.5 மில்லியன் டொலரை நிதியுதவியாக அளித்துள்ளது.
கடந்த ஆண்டில் முதலிடத்தில் இருந்த சீனா இம்முறை நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. சீனா இந்த ஆண்டில் 32.5 மில்லியன் டொலரையே, இலங்கைக்கு வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment