Monday, July 02, 2012இலங்கை::கல்முனை நகரில் புடவை விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்தியப் பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரும் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கைக்கு வருகைதந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கல்முனைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் கல்முனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு இந்தியப் பெண்களையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment