Tuesday, June,05, 2012கனடாவில் புலிகளுக்கு பணம் அனுப்பி வைத்த இரண்டு இந்து ஆலயங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு இந்து ஆலயங்களினதும் நிர்வாகிகள் கடந்த 2004ம் ஆண்டில் புலிகளுக்கு பணம் அனுப்பி வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் போது தகுதியற்ற அறக்கட்டளைகளுக்கு பணம் அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ரிச்மன்ட் ஹில் இந்து ஆலயம் மற்றும் மஷிசாகுவா இந்து ஆலயம் ஆகியவற்றுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முறையே 140000 மற்றும் 300000 டொலர் என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு ஆலயங்களினதும் அறக்கட்டளைகள் தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு பணம் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் புலிகளுக்கு ஆதரவளித்து வந்த அமைப்பு என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற போது 70 வீதமான தமிழர் பிரதேசங்களே பாதிக்கப்பட்டதாகவும், கிடைக்கப் பெற்ற உதவிகளில் 80 வீதமானவை தென் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டதாகவும் ரிச்மன்ட் ஹில் ஆலயத்தின் செயலாளர் மணிக் அம்பிகாபதி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் பணம் அனுப்பி வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் வருமான முகவர் நிறுவனத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment