Tuesday, June 26, 2012

வாக்காளர் பெயர்ப்பட்டியலை கணணிமயப்படுத்த நடவடிக்கை!

Tuesday, June 26, 2012
இலங்கை::வாக்காளர் பெயர்ப்பட்டியல்களை கணணிமயப்படுத்துவதற்கு தேர்தல்கள் செயலகம் திட்டமிட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 2011ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலை கணணிமயப்படுத்த உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

எதிர்வரும் சில மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை நிறைவுசெய்ய எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

வாக்காளர் பெயர்ப்பட்டியல்களை கணணிமயப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு மிகவும் இலகுவாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment