Tuesday, ,May, 29, 2012
இலங்கை::புலம்பெயர் சமூகம் உள்நாட்டு அரசியல்வாதிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மன தைரியத்துடன் உள்நாட்டு தமிழ் அரசியல்வாதிகள் எடுக்கும் தீர்மானங்களை புலம்பெயர் சமூகம் மதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் சமூகத்தின் கருத்துக்கள் இலங்கை வாழ் தமிழர்களுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமையக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் சில தரப்பினர் இலங்கை தமிழ் மக்கள் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவே கருதுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
தாயகத்தில் வாழும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் புலம்பெயர் மக்களின் நடவடிக்கைகள் அமைய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 13ம் திருத்தச் சட்ட மூலத்தை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமாக கருதப்பட முடியாது என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய காத்திரமான தீர்வுத் திட்டம் ஒன்றின் அவசியம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுய மரியாதையுடன் வாழக் கூடிய சகல அதிகாரங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment