Tuesday, ,May, 29, 2012
பலசூர்::ஒடிசா மாநிலம் பலசூர் அருகே உள்ள சாந்திபூர் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்தில் இன்று காலை 2 ஆகாஷ் ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. எதிரி விமானங்கள், ஆள்இல்லா விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றை வழியிலேயே தாக்கி அழிக்கும் திறன் படைத்த ஆகாஷ் ஏவுகணைகள் இந்திய ராணுவத்தின் தரைப்படை, விமானப்படையில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த ரக ஏவுகணைகள் அடிக்கடி சோதித்து பார்க்கப்படுவது வழக்கம். கடந்த வாரம் 24, 26-ம் தேதிகளில் 2 முறை ஆகாஷ் ஏவுகணைகள் சோதித்து பார்க்கப்பட்டன.
இந்நிலையில், 3-வது முறையாக ஒடிசாவின் பலசூர் மாவட்டத்தில் உள்ள சாந்திபூர் ஏவுகணை சோதனை தளத்தில் 2 ஆகாஷ் ஏவுகணைகள் இன்று காலை சோதனை செய்யப்பட்டன. இதையொட்டி, சோதனை தளத்தில் இருந்து முதலில் ஆளில்லா விமானம் ஒன்று வானில் பறக்கவிடப்பட்டது. பின்னர் இதை குறிவைத்து 2 ஆகாஷ் ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்பட்டன. ஏவுகணையில் உள்ள சக்திவாய்ந்த ரேடார் கருவி உதவியுடன், விமானத்தை துல்லியமாக குறிபார்த்து, 2 ஏவுகணைகளும் மிகச்சரியாக அதை தாக்கியதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன (டிஆர்டிஓ) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment