Monday, ,May, 28, 2012
இலங்கை::முப்பது வருடங்கள் புலிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனம் மற்றும் நாடு பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இடம் பெறுகின்ற துரித அபிவிருத்தி என்பன தொடர்பாக வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அறிவூட்டும் நோக்கிலான புகைப்படக் கண்காட்சி ஒன்று ‘உயிர்தெழும் இலங்கை’ என்ற பெயரில் நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் கடந்த 25ம், 26ம் திகதி களில் நடைபெற்றது. ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கேட்போர் கூடத்திலும், ஹெப்ஸன் வித்தியாலயத்திலும் நடைபெற்ற இக் கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த இரு நாள் புகைப்படக் கண்காட்சியைப் பெருந்திரளான மக்கள் பார்வையிட்டனர்.
புலிப் பயங்கரவாதிகள் அப்பாவி பொது மக்களை இலக்கு வைத்து மேற்கொண்ட மனிதாபிமானமற்ற தாக்குதல்கள், பொருளாதார மையங்கள் மீதான தாக்குதல்கள், பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாடு விடுவிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்டு வரும் துரித அபிவிருத்தி என்பவற்றைத் தெளிவுபடுத்தும் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
நோர்வே நாட்டில் வாழும் புலம் பெயர் தமிழ்கள் உட்பட பெருந்தொகையான மக்கள் இக்கண்காட்சியைப் பார்வை யிட்டனர்.
இக்கண்காட்சியின் பயனாக புலம் பெயர் தமிழர்கள் பலரிடம் காணப்பட்ட இலங்கைக்கு எதிரான அபிப்பிராயத்தை களைய முடிந்திருப்பதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவும், வெளிவிவகார அமைச்சும் இணைந்து ஒழுங்கு செய்த இக்கண்காட்சிக்கு ஒஸ்லோ நகரில் வாழும் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் விசேட பங்களிப்புகளை நல்கினர். அத்தோடு இலங்கையின் நோர்வே நாட்டுத் தூதுவர் ரொட்னி பெரேராவும் ஜனாதிபதி செயலகமும் இக்கண்காட்சிக்கு உச்சளவு பங்களிப்பை நல்கின.
இக்கண்காட்சியை ஒஸ்லோ நகரில் வாழும் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், ஒஸ்லோ பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டமை விசேட அம்சமாகும் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment