Tuesday, May 1, 2012

புலிகளினால் படு கொலைசெய்யப்பட்ட ரணசிங்க பிரேமதாசவின் 19 ஆவது ஞாபகார்த்த தினம் இன்று!

Tuesday, May, 01, 2012
இலங்கை::புலிகளினால் படு கொலைசெய்யப்பட்ட ரணசிங்க பிரேமதாசவின் 19 ஆவது ஞாபகார்த்த தினம் இன்று:-

புலிகளினால் படு கொலைசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியும் பிரபல அரசியல் தலைவருமான மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் 19 ஆவது ஞாபகார்த்த தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

புதுக்கடையில் அமைந்துள்ள ரணசிங்க பிரேமதாசவின் உருவச்சிலைக்கு அருகில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக ரணசிங்க பிரேமதாச ஞாபகார்த்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவிக்கின்றார்.

ரணசிங்க பிரேமதாசவை மதிக்கும் அனைவருக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

1924 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி பிறந்த ரணசிங்க பிரேமதாச, நாட்டின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக 1989 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார்.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ரணசிங்க பிரேமதாச, ஜனசவிய மற்றும் கம்உதாவ போன்ற செயற்திட்டங்களின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

1993 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி ரணசிங்க பிரேமதாச கொழும்பு ஆமர் வீதியில் இடம்பெற்ற புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment