Sunday, April 01, 2012
இலங்கை::வடமாகாண சபைத் தேர்தல் நடக்கும் பட்சத்தில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு முன்னாள் விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் தயாராகி வருவதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது. அதற்காக அவர் தன்னைத் தயார் படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் தயா மாஸ்டர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் உயர் பதவி வகிப்பதுடன் ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார். அண்மையில் அவரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த ஊடக் நண்பர்கள், வடமாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அவர் இல்லையெனப் பதிலளிக்கவில்லை. அதன் மூலம் அவர் தனது விருப்பத்தையும், சம்மதத்தையும் தெரியப்படுத்தியுள்ளார்.
எனினும் தான் எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்பதில் சிக்கல் நிலை உள்ளதாக ஊடக நண்பர்களிடம் தெரி வித்த அவர் தற்போது தான் சகலரா லும் நேசிக்கப்படும் ஒருவராக உள்ள தாகவும் அதனால் மக்களின் விருப்பமே தனது விருப்பம் எனவும் தெரி வித்துள்ளதுடன், புலிகள் அமைப்பிலிருந்த போதும் தான் மக்களுக்குச் சேவை செய்வதிலேயே குறியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தங்களை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு அவர்கள் கேட்டால் தங்களது முடிவு எவ்வாறு அமையும்? எனக் கேட்டதற்கு மெளனத்தை பதிலாகத் தந்து சம்மதத்தை நாசூக்காகத் தெரிவித்துக் கொண்டார்.

No comments:
Post a Comment