Saturday, April 28, 2012

யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தில் 34 சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் அடங்கலாக 62 சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன!



Saturday, April, 28, 2012
இலங்கை::யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தில் 34 சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் அடங்கலாக 62 சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன என யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக சிறுவர்கள் மீது துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும் அது குறைந்தபாடாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதன் உச்சக் கட்டமாக சாவகச்சேரியைச் சேர்ந்த 17 வயது இளைஞன், 14 வயதான தனது சொந்த தங்கையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். குறித்த சிறுமி கர்ப்பமாகியதன் பின்னரே பெற்றோருக்குக் கூட தெரியவந்தது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 62 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி மாதம் 12 சம்பவங்களும் பெப்ரவரி மாதம் 21 சம்பவங்களும் மார்ச் மாதம் 2 சம்பவங்களும் ஏப்ரல் மாதம் இதுவரையில் 27 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன என்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பதிவுகள் உள்ளன.

இதில் 34 சம்பவங்கள் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment