Thursday, March 29, 2012

முன்னாள் திமுக அமைச்சர் நேருவின் தம்பி தொழிலதிபர் ராமஜெயம் கடத்தல்!

Thursday,March,29,2012
திருச்சி::முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம், இன்று காலை வாக்கிங் சென்றபோது திடீரென மாயமானார். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. திருச்சி மாவட்ட திமுக செயலாளராக உள்ளார். இவரது தம்பி ராமஜெயம் (48). தொழிலதிபரான இவர், திருச்சியில் குவாரி நடத்தி வருகிறார். இன்று காலை திருச்சி தில்லைநகரில் உள்ள வீட்டில் இருந்து வாக்கிங் சென்ற ராமஜெயம், நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர், செல்போனில் தொடர்பு கொண்டனர். அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தொழில் போட்டி காரணமாக யாராவது அவரை கடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ராமஜெயம் மாயமானது குறித்து தகவல் கிடைத்ததும் சென்னையில் தங்கியிருந்த நேரு, அவசரமாக திருச்சி விரைந்து வந்தார். ஏராளமான திமுகவினரும் ராமஜெயம் வீட்டு முன்பு கூடினர். இதனால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment