Saturday, March 31, 2012

அமெரிக்கா வலியுறுத்தியே வாக்குகளை பெற்றது-டளஸ் அழகப்பெரும!

Saturday, March, 31, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பாக அண்மைக்காலங்களாக பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு எதிராக தமது வாக்குகளை பிரயோகித்த நாடுகள் தொடர்பாக சில அமைப்புகள் போன்றே அமைச்சர்களும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதேவகையில், கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய இளைஞர் விவகார, திறனபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்டார்.

பிரேரணையை சமர்ப்பிக்கும் முன்னதாக மார்ச் 22 ம் திகதி வரை அது அமெரிக்காவின் யோசனையாக மாத்திரமே, இருந்தது..

அது சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 23 ம் திகதியிலிருந்து சர்வதேச சமூகத்தின் பிரேரணையாக மாறியது.

வெளி உலகுக்கு தெரியாமல் வலியுறுத்தியே, வாக்குகள் பெற்றமை தமக்கு தெரியும் என்றும் அமைச்சர் டளஸ் அழகப் பெரும குறிப்பிட்டார்.

இந்தியா - இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய உதவிகளை வழங்கியநாடு.

அவர்கள் இல்லாத நிலையில் யுத்தத்தை வெற்றி பெற்றிருக்க முடியாது..

பாடசாலைகள் நெருக்கடியை எதிர்நோக்கி மூடப்பட்டிருந்த தருணத்திலும், இலங்கை திரைப்பட நடிகர்கள் பாதிக்கப்பட்டிருந்த போதும், கடந்த வருடம் ஏப்ரல், மே மாத காலப்பகுதிகளில் இந்தியா உதவியளித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியா - இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவில்லை எனவும், அமெரிக்கா அவர்களிடம் வலியுறுத்தல் விடுத்தே பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
.

No comments:

Post a Comment