Friday, March 30, 2012

மாணவிகள் துஷ்பிரயோகம்; சந்தேகத்தில் அதிபர் கைது!

Friday, March, 30, 2012
இலங்கை::பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் மாரவில பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சந்பந்தப்பட்ட பாடசாலை அதிபர் நேற்று பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உடபடுத்தப்பட்டதாக கூறப்படும் ஐந்து மாணவிகள் மேலதிக பரிசோதனைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுமாரர் பத்து வயதான பாடசாலை மாணவிகளே அதிபரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No comments:

Post a Comment