Thursday,March,29,2012
புதுடெல்லி::தொடர்ந்து சர்ச்சை கிளப்பி வரும் ராணுவ தளபதி வி.கே.சிங்கை கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி வி.கே.சிங்கின் பதவிக்காலம், ராணுவ தலைமையகத்தில் பதிவாகியுள்ள பிறந்த தேதி அடிப்படையில் வரும் மே 31 அன்று நிறைவுக்கு வருகிறது. தனது உண்மையான பிறந்த தேதி அடிப்படையில் அடுத்த ஆண்டு தான் ஓய்வு பெற வேண்டும் என மத்திய அரசிடம் வி.கே.சிங் கோரிக்கை வைத்தார். இதனை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வி.கே.சிங் வழக்கு தொடர்ந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. இதை தொடர்ந்து வரும் மே 31 அன்று வி.கே.சிங் ஓய்வு பெறுவது உறுதியானது. புதிய தளபதி பெயரையும் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அரசுக்கு எதிராக புதிய சர்ச்சையை வி.கே.சிங் கிளப்பினார். ராணுவத்துக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் வாகனங்களை வாங்க ஒப்புதல் அளித்தால் தனக்கு ரூ. 14 கோடி லஞ்சம் கொடுக்க ஒருவர் பேரம் பேசியதாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் தான் புகார் கூறியதாகவும் தகவல் வெளியிட்டு, மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினார்.
இந்த பரபரப்பு ஓய்வதற்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு வி.கே.சிங் கடந்த 12ம் தேதி எழுதிய ரகசிய கடிதம் வெளியாகி, இன்னொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ தளவாடங்களுக்கு வெடிமருந்துகள் இல்லை; விமானப்படை முற்றிலும் வலுவிழந்து உள்ளது. இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறன் குறைந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக அந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது. ரகசியமாக வைக்கப்பட வேண்டிய இந்தக் கடிதம் பத்திரிகைகளில் வெளியாகி மத்திய அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னை நேற்று நாடாளுமன்றத்தில் பூதாகரமாக கிளம்பியது. வி.கே.சிங் கடிதம் வெளியானது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பா.ஜ. தலைவர்கள் கேள்வி எழுப்பினர். வி.கே.சிங்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த திவாரி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். கடிதத்தை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய ஏ.கே.அந்தோணி, ராணுவ பலம் தொடர்பாக பிரதமருக்கு ராணுவதளபதி எழுதிய கடிதம் வெளியாகி இருக்கக்கூடாது. இதில் அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்’’ என்றார். முன்னதாக இந்தப் பிரச்னை குறித்து பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம், ராணுவத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா ஆகியோருடன் பிரதமர் மன்மோகன்சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர் ராணுவ தளபதி வி.கே.சிங். ராணுவத்தில் நடைபெற்ற ஆதர்ஷ் குடியிருப்பு, சுகுணா நில மோசடி உள்பட பல்வேறு ஊழல் புகார்களில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது தயங்காமல் நடவடிக்கை எடுத்தவர் வி.கே.சிங். எல்லைக் காவல் படையில் ஆயுதங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அம்பிகா பானர்ஜி கடந்த மே மாதம் வி.கே.சிங்குக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தை உடனடியாக சிபிஐக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வி.கே.சிங் உத்தரவிட்டார். இப்படி பல்வேறு சூழ்நிலையில் நேர்மையாக செயல்பட்டுள்ள வி.கே.சிங்கை டிஸ்மிஸ் செய்தால் அது மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் அவரை டிஸ்மிஸ் செய்வதற்கு பதிலாக கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடிதத்தை வெளியிட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment