
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பதினொரு உத்தியோகத்தர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் ரன்கல காவல் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 2ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் பயணம் செய்த இரண்டு வாகனங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும் இதனால் இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மதுபோதையிலிருந்த காவல்துறை உத்தியோகத்தர்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment