Wednesday, March 28, 2012

கொழும்பில் சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்!

Wednesday,March,28,2012
இலங்கை::சட்டத்தரணி ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கொழும்பில் சட்டத்தரணிகள் சிலர் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.

கோட்டையில் இரண்டு தேரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் தாக்குதலுக்கு இலக்கானதைக் கண்டித்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்திற்கு சமூகமளிப்பதிலிருந்து சட்டத்தரணிகள் விலகிக்கொண்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்தார்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment