![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-WmOM_JvO1YCVK0UQcJ0Vo-9zekqGMdke0H0SZd7eYd5Rbns2ryKQsRm2Ozlb2YhRUNW-nW3AmG6SzOb1zixWSF3lVhpGVnX5JjGdEowCTiRyJOugZEFrMvzfmtfOPutuDOs8jbnUN3y-/s400/us-Nancy%25E2%2580%2591Powell-in.jpg)
வாஷிங்டன்::இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த திமோதி ரோமர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி விலகியதை தொடர்ந்து அப்பதவி காலியாக இருந்தது. இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்து கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக கூறி வரும் அதிபர் ஒபாமா, இந்தியாவுக்கான புதிய தூதரை நியமிக்க நடவடிக்கை எடுத்தார். பாகிஸ்தான் மற்றும் நேபாள நாடுகளில் தூதராக பணியாற்றிய நான்சி போவல் பெயரை பரிந்துரை செய்து பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்.
மேலும், காலியாக இருக்கும் 15 நாடுகளுக்கான தூதர் பதவிக்கும் பெயர்களை பரிந்துரை செய்திருந்தார். கடந்த 2 மாதமாக இந்த பரிந்துரை பாராளுமன்றத்தில் நிலுவையில் இருந்தது. தூதர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்து சமீபத்தில் கவலை தெரிவித்த ஒபாமா, பாராளுமன்றம் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்தியா, பார்படோஸ், கம்போடியா, ஜார்ஜியா, துனிசியா, லிபியா, ஹைதி, பனாமா, உருகுவே உள்பட 16 நாடுகளுக்கான தூதர்களை நியமிக்க பாராளுமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது. அதன்படி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நான்சி போவல் நியமிக்கப்படுகிறார்.
No comments:
Post a Comment