Thursday, March 1, 2012

மன்னார் சந்தையில் தீ; 40 வர்த்தக நிலையங்களுக்கு சேதம்!

Thursday, March 01, 2012
இலங்கை::மன்னார் வாராந்த சந்தையில் இன்று அதிகாலை பரவிய தீயினால் 40 வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

மன்னார் நகரிலுள்ள வாராந்த சந்தையில் இன்று அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தத் தீ பரவியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

தீயினால் சந்தையிலுள்ள சிறு அளவிலான சுமார் 40 வர்த்தக நிலையங்களும் அவற்றிலிருந்த பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரும் கடற்படையினரும் பொலிஸாருடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment