Tuesday, February 28, 2012
இலங்கை::யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் குறிப்புரைகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணை நீதிமன்றமானது அவ்வறிக்கையில் குறித்துரைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்பான தனிநபர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.
அக்கறையுடையவர்களை இவ்விசாரணை நீதிமன்றுக்கு வந்து சாட்சியமளிக்கும்படி கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தலைமயகத்தின் தற்போதைய தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த டி சில்வாவின் தலைமையில் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணை மன்றம் கோரியுள்ளளது.
அதேசமயம் இம்மன்றின் அங்கத்தவர்கள், மக்களிடம் சென்று வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர்.
இவ்விசாரணை நீதிமன்றம் கிளிநொச்சியில் இயங்குகிறது. கடந்த ஜனவரி மாதம் வாக்குமூலங்கள் பதிவுசெய்ய ஆரம்பிக்கப்பட்டதாக இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராச்சி கூறினார்.
இந்த விசாரணை நீதிமன்றம் தகவல்களை திரட்டுவதாக இருக்கும். இதன் மூலம் பாதுகாப்பு படையினர் எவருக்கும் எதிராக உறுதியாக ஆதாரங்கள் வெளிவந்தால் அது தொடர்பான வழக்கை விசாரிக்க இராணுவ நீதிமன்றமொன்று அமைக்கப்படும்.
பொது இராணுவ நீதிமன்றமானது மேல் நீதிமன்றத்தின் ட்ரையல் அட் பாரை ஒத்த நியாயாதிக்கத்தை கொண்டிருக்கும். இந்நீதிமன்றுக்கு மரண தண்டனை உட்பட எந்த தண்டனையையும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment