Wednesday,February,01,2012
இலங்கை::ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட (தேசிய ஐக்கிய முன்னணி) புலிகளினால் ஸ்தாபிக்கப்பட்ட விடுதலை புலிகள் மக்கள் முன்னணி மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல.எவ்) ஆகிய கட்சிகளின் பதிவுகளை தேர்தல் திணைக்களம் இன்று புதன்கிழமை இரத்து செய்துள்ளது.பதிவினை பாதுகாப்பதற்காக வருடாந்தம் பேணப்பட வேண்டிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமையினாலேயே தேர்தல் ஆணையாளர் குறித்த கட்சிகளின் பதிவினை நிராகரித்துள்ளார்.
புதிய சட்டத்திற்கிணங்க அனைத்து அரசியல் கட்சிகளும் வருடாந்த கணக்கறிக்கையினை தேர்தல் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை புலிகள் மக்கள் முன்னணி 1989ஆம் ஆண்டு புலிகளின் அரசியல் பிரிவாக உருவாக்கப்பட்டது. புலிகளின் பிரதி தலைவரான மாத்தையா என்றழைக்கப்படும் கோபாலசுவாமி மகேந்திரராஜா இக்கட்சியின் தலைவராகவும் யோகரட்னம் யோகி பொதுச் செயலாளராகவும் செயற்பட்டனர். இக்கட்சியின் சின்னமாக புலி காணப்பட்டது.
1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற அனைத்து கட்சி மாநாட்டில் புலிகள் மக்கள் முன்னணி பார்வையாளராக மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவினால் அழைக்கப்பட்டது.
இக்கட்சி 1990 இல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அரசியல் செயற்பாடுகளிலிருந்து வாபஸ் பெற்றது.
இக்கட்சியின் முதலாவது தேசிய மாநாடு 1990ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி தொடக்கம் மார்ச்ச 1ஆம் திகதி வரை வாகரையில் இடம்பெற்றது. சுமார் 15,000 பேர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் கட்சியின் விஞ்பானமும் யாப்பும் அங்கீகரிக்கப்பட்டது.
இதேவேளை, 2000ஆம் ஆண்டளவில் நாட்டின் தேசிய அரசியலில் நுழைவதற்கு பாலமாகவே தேசிய ஐக்கிய முன்னணியை மறைந்த அமைச்சர் அஷ்ரப் ஸ்தாபித்ததாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சிங்கபூருக்கான இலங்கை தூதுவரும் மறைந்த அமைச்சர் அஷ்ரபின் மனைவியுமான பேரியல் அஷ்ரப் பின்னர் அக்கட்சியின் தலைவராக செயற்பட்டார்...
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர் பட்டியலிலிருந்து மூன்று கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி மற்றும் விடுதலை புலிகள் மக்கள் முன்னணி ஆகிய அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கால எல்லைக்குள் முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதன் காரணமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர் பட்டியலில் இருந்து இந்தக் கட்சிகளை நீக்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டிள்ளார்.
கடந்த வருடம் ஜனவரி 27 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட அரசியல் கட்சிகள் பெயர் பட்டியலில் 67 கட்சிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

No comments:
Post a Comment