Wednesday,February,01,2012
இலங்கை::(புலி)கூட்டமைப்பின் காணி அதிகார கோரிக்கைக்கு ஆப்பு! பாராளுமன்றிற்கு புதிய சட்டமூலம்:-
நகர மற்றும் நாடு திட்ட திருத்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் பாராளுமன்றில் சமர்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌத்த சாசன அமைச்சின் செயற்திட்டத்தின் கீழ் குறித்த சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்ட மூலம் அனுமதிக்கென உயர் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டதாகவும் மாகாண சபைகளில் இச்சட்டமூலத்தை சமர்பித்து அதில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று பாராளுமன்றில் சமர்பிக்குமாறு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த நகர மற்றும் நாடு திட்ட திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக மாகாண காணிகளை அரசாங்கம் தன்வசப்படுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான குமர குருபரன் தெரிவிக்கின்றார்.
சட்ட மூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்படுமாயின் மாகாண சபைகளுக்கு உட்பட்ட காணி ஒன்று பாதுகாப்பு, வரலாற்று முக்கியத்துவம், புனித பூமி என்ற அடிப்படையில் மத்திய அரசுக்கு சொந்தமாக்கிக் கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் காணி அதிகாரம் குறித்து பேசப்படும் நிலையில் அரசாங்கம் இவ்வாறானதொரு சட்ட மூலத்தை கொண்டுவந்தால் அது வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என குமர குருபரன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே எதிர்வரும் 6ம் திகதி இச்சட்டமூலம் பெரும்பாலான மாகாண சபைகளில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் இதன்போது கிழக்கு மாகாண சபை அதற்கு எதிர்ப்பை வெளியிட வேண்டும் எனவும் குமர குருபரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment