Wednesday, February 1, 2012

வேலையற்ற பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணத்தில் கண்டனப்பேரணி: ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரி யாழ். பட்டதாரிகள் சங்கம் மகஜர்!

Wednesday,February,01,2012
இலங்கை::யாழ்.மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ஒன்று திரண்டு கண்டனப்பேரணியொன்றினை யாழ்.நகரில் மேற்கொண்டனர். தமக்கான வேலைவாய்ப்புகளை வழங்;க கோரியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ் நகரப்பகுதியிலுள்ள ஆலயமொன்றினில் குவிந்த நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் அங்கு கலந்துரையாடலொன்றினை நடத்திய பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு ஸ்ரான்லி வீதியூடாக ஈபிடிபி தலைமை காரியாலயமான சிறீதர் திரையரங்கை வந்தடைந்தனர்.

அவர்களது வருகை தொடர்பான தகவல் அறிந்து கொண்டதையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் நேரில் சென்று ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுக்களை நடத்தினர்.

அவ்வேளையில் அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் எனக்கு வாக்களித்து இருப்பீர்களானால் இவ்வாறு அநாதரவாக நின்றிருக்க தேவையில்லை.உங்களுக்கான வேலை வாய்ப்பினை நானே ஏற்படுத்தி வழங்கியிருப்பேன் நீங்கள் நம்பி வாக்களித்தவர்களால் என்ன பலனை கண்டீர்களென கேள்வி எழுப்பினார்...

அரசாங்கத்தால் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் பட்டதாரி நியமனங்களுள் 3 ஆயிரம் நியமனங்களை யாழ்.மாவட்ட பட்டதாரிகளுக்கு வழங்கக் கோரி யாழ். மாவட்ட பட்டதாரிகள் சங்கம் இன்று அமைதிப் பேரணி ஒன்றில் ஈடுபட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் எதிர்வரும் நாட்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதால், அவரை சந்திப்பதற்கான அனுமதியைப் பெற்றுத்தருமாறுகோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோரிடம் பட்டதாரிகள் சங்கம் மகஜர்களை கையளிக்கவுள்ளது.

யாழ்.பெருமாள் கோவிலடியில் இன்று காலை 11 மணியளவில் கூடிய பட்டதாரிகள் அமைதி முறையிலான பயணத்தை மேற்கொண்டு முதலில் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவின் அலுவலகம் நோக்கி சென்றுள்ளனர்.

இதேவேளை, தங்களுடைய மகஜரைப் பொறுப்பேற்று குறித்த தரப்பினர் அதற்குரிய நடவடிக்கைகளை செய்துதராத பட்சத்தில் நாளை முதல் எதிர்வரும் 6-ம் திகதி வரை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபடவுள்ளதாக யாழ். பட்டதாரிகள் சங்கத் தலைவர் பாலசிங்கம் விஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment