Sunday, January 29, 2012

அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளின் போது ஏதோ யுத்த முனைக்குச் சென்று விட்டு கடுப்புடனும், கோபா வேசத்துடன் ஊடகங்களுக்குக் கருத்துக்களைத் தெரிவிப்பது (புலி)கூட்டமைப்பின் வழமையான விடயமாகிவிட்டது!

Sunday, January 29, 2012
இலங்கை::அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தி வரும் பேச்சுவார்த்தைக ளின் போது பேச்சில் கலந்து கொள்ளும் அரச தரப்பிடம் பேச்சின் போது தெரி விக்காத அல்லது முன்வைக்காத பல விடயங்களை அன்றைய பேச்சு முடிந்து வெளியே வந்ததும் ஊடகங்களுக்கு அதிலும் குறிப்பாகத் தமக்கு சார்பாக இயக்குவதாகக் காட்டிக் கொள்ளும் சில தமிழ் ஊடகங்களுக்கு வழங்கி வருவதில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தலைவர்கள் முனைப்புக் காட்டி வருவது குறித்து அரச தரப்பில் விசனம் தெரிவிக் கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தி அவர்களது ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது அரசாங்கத்தையும், பேச்சில் கலந்து கொள்ளும் அரச தரப்புப் பிரதிநிதிகளையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது.

பேச்சில் ஈடுபட்டிருக்கும் வேளையில் மிகவும் நட்பாகவும், பேச்சிற்குச் சம்பந்தமில்லாத விடயங்களைக் கூட சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் சிரிப்பொலி எழும்பப் பேசி விட்டு வெளியே வந்ததும் ஏதோ யுத்த முனைக்குச் சென்று விட்டு கடுப்புடனும், கோபா வேசத்துடன் ஊடகங்களுக்குக் கருத்துக்களைத் தெரிவிப்பது கூட்டமைப்பின் வழமையான விடயமாகிவிட்டது.

ஒன்றுக்கு சம்மதித்தால் இரண்டு கேட்பது, இரண்டுக்கும் உடன்பட்டால் நான்கு கேட்பதும் சரி நான்குக்கும் சம்மதித்தால் எட்டுக் கேட்பதுமாக இதுவரை பதினெட்டு சுற்றுக்களை எந்த விதமான பிரயோசனமும் இல்லாது பேசுகிறோம் என்று வீணாகக் கழித்துவிட்ட நிலையே காணப்படுகிறது.

புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னரும் தமிழ் மக்களுக்கு அரசியல் மூலமாக ஒரு தீர் வினைக் காண்பதில் அரசாங்கம் அக்கறை காட்டி வரும் நிலையில் அதனை அரசின் பல வீனமாகக் கருதுவதாலேயே தமிழ்க் கூட்டமைப்பு இத்தகைய இழுத்தடிப்பு, அரசிற்கு அப கீர்த்தி ஏற்படுத்தல் என்பவற்றைச் செய்து வருகிறது என எண்ணத் தோன்றுகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்று வரும் பதினெட்டுச் சுற்றுப் பேச்சுக்களில் குறைந்தது பத்துத் தடவையாவது அரசாங்கத்துடன் முரண்பட்டு இனிப் பேச்சுக்கு இட மில்லை, பேச்சு முறிவடைந்து விட்டது, அரசுடன் பேசுவதால் பலனில்லை, பேச்சை தொடர் வதில் அர்த்தமில்லை, ஏமாற்றும் அரசுடன் பேசுவதிலிருந்து விலகிக் கொள்கிறோம் என்றெல் லாம் வீர அறிக்கைகளை விட்டு விலகி நின்ற நிலையை தமிழ்க் கூட்டமைப்பிடம் நாம் கண் டோம்.

இவர்களது வீர அறிக்கைகள் எதனையுமே காதில் வாங்கிக் கொள்ளாது அரசாங்கம் மெளனித்திருந்து பொறுமைகாக்கையில் தமாமாக இறங்கி வந்து அரசுடன் தொடர்ந்தும் பேசத் தயார், அரசுடன் பேசுவதன் மூலமே தீர்வினைக் காணலாம், பேச்சைத் தொடர்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை என்று கால்களில் விழாக்குறையாக பேச்சுக்கான திகதியைக் குறிப்பதில் குறியாக இருப்பர். இதுவே தமிழ்க் கூட்டமைப்பின் இரண்டரை வருடகால அரசியலாக உள்ளது.

உலக நாடுகள் பலவற்றைத் தம்பக்கம் திரும்பிப் பார்க்குமளவிற்கு ஆயுத பலத்தை வைத் திருந்த விடுதலைப் புலிகள் கூட இன்று தமிழ்க் கூட்டமைப்பினர் அரசிற்கு விட்டு வரும் சவால்களை விட்டது கிடையாது. பேச்சை முறித்துக் கொண்டதும் புலிகள் போருக்குச் சென்றனர். போராடினர். தோற்றுவிட்டனர். அதேபோன்று தமிழ்க் கூட்டமைப்பினர் பேச்சை முறித்துக் கொண்டால் அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? இவர்களிடம் போராட ஆயுதங்கள் உள்ளதா? ஆகாயப்படை, தரைப்படை, கடற்படை வைத்திருந்த புலிகளே அழிக்கப்பட்ட நிலையில் இவர்களால் என்ன செய்ய முடியும்? தம்மிடம் இருப்பது அறிக் கைப்படை மட்டுமே என்பது கூட்டமைப்பிற்கு நன்கு தெரியும்.

ஆயுதப் போராட்டத்தில் முப்பது வருடங்களைத் தொலைத்து நிற்கும் மக்கள் அடுத்து வரும் வருடங்களை அஹிம்சைப் போராட்டத்திலோ, வெறுமனே வீர அறிக்கைப் போராட் டத்திலோ கழிக்க விரும்பவில்லை.

அரசாங்கத்துடன் ஒரு சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி தமது அரசியல் அபிலாஷைக ளையும், தேவைகளையும் நிவர்த்தி செய்யும் ஒரு நிலையான தீர்வினைக் காண்பதையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். ஆயுதப் போராட்டம், அஹிம்சை போராட்டம் எனக் கூறி இனியும் தமது எதிர்கால வாழ்வுடன் எவரும் விளையாடுவதை அம்மக்கள் விரும்பவில்லை. ஏற்கவும் தயாராக இல்லை.

தமக்கான தீர்வில் நல்லதொரு நிலைப்பாட்டையெடுத்து தமக்கு நியாயமானதொரு இறுதித் தீர்வு கிடைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியையே அம்மக்கள் நாடி நிற்கின் றனர். இன்றைய சூழலில் அரசாங்கம் தமக்கு நல்லதோர் தீர்வை நிச்சயம் வழங்கும் என அம்மக்கள் நம்பினாலும் தமிழ்க் கூட்டமைப்பைத் தமக்கும் அரசிற்குமிடையிலான பாலமாக அவர்கள் எண்ணுகிறார்கள்.

அதனாலேயே வடக்கு, கிழக்கில் தேர்தல்கள் நடந்த போதெல்லாம் அம்மக்கள் தமிழ்க் கூட்டமைப்பிற்குத் தமது ஆதரவை வழங்கினார்கள். இதனைத் தமிழ்க் கூட்டமைப்பு தவறா கப் புரிந்து கொள்ளக்கூடாது. வாக்களித்து உங்களுக்கு ஆணையைத் தந்த மக்களுக்குத் துரோகமிழைக்காது அம்மக்களுக்கான தீர்வை விரைவாகப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்து டன் விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வுடன் பேச்சை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். அதுவே அம்மக்களுக்குச் செய்யும் சிறந்த கைமாறாக அமையும்.

தமிழ் மக்கள் உங்களுக்குத் தமது பெரும்பான்மை ஆதரவைத் தந்தமையாலேயே அரசாங் கம் அதற்கு புதிப்பளித்து உங்களுடன் பேசிவருகிறது. பதின் மூன்றாவது திருத்தத்திற்கு அப் பால் சென்று பேசத் தயாராகவுள்ள அரசு உங்களைப் புறந்தள்ளி ஒதுக்கிவிட்டு நேரடியாகவே தமிழ் மக்களுக்கான தீர்வை அவர்களின் எதிர்பார்ப்பிற்கும் மேலாக வழங்கலாம். ஆனால் உங்களூடாகச் செய்ய நினைப்பதைத் தொடர்ந்தும் பலவீனமாகக் கருதக்கூடாது. பொறுமை இழந்து நேரடியாகத் தீர்வை வழங்கினால் உங்கள் நிலை என்னவாகும் என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் இனியும் கண்டபடி விமர்சனம் செய்யும் வீரவசன அறிக்கைகளுக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

No comments:

Post a Comment