Sunday, January 29, 2012

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் பாலியல் தொல்லை: அரசு ஆசிரியர் பயிற்சி முதல்வர் மீது புகார்- மாணவிகள் திடீர் போராட்டம்!

Sunday, January 29, 2012
நாமக்கல்::நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வெளியூர்களில் இருந்து வந்து விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியின் முதல்வராக கனகராஜன் என்பவர் உள்ளார். இவர் மீது கல்லூரி மாணவிகள் பாலியல் கொடுமை செய்வதாக நாமக்கல் போலீசில் புகார் செய்தனர்.

மேலும் அவர்கள் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளிருப்பு போராட்டமும் செய்து வருகிறார்கள். உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் மாணவிகளிடம் நாமக்கல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.ஐ. சுப்பிரமணியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். புகார் மனு முதல்வர் மீது மாணவிகள் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

எங்கள் நிறுவன முதல்வர் எங்களிடம் தவறாக நடந்து கொள்கிறார். நாங்கள் அவரால் மனதளவில் மிகவும் பாதிப்படைந்து உள்ளோம். அவர் எங்களிடம் எல்லை மீறி நடக்கின்றார். எங்களை அவர் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்ய செய்தார். நாங்கள் சுத்தமாக கழுவுகிறோமா? என்பதை கண்காணிக்க பெண் விரிவுரையாளர் ஒருவரை அனுப்பி வைத்தார்.

மேலும் அவர் எங்களை அடிக்கடி மிரட்டினார். அவர் கூறிய வேலையை செய்யவில்லை என்றால் அகமதிப்பீட்டு தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்றும் விடுதியை விட்டு வெளியேற்றி விடுவேன் என்றும், தேர்வு எழுதிய விடைத்தாளை கிழித்து விடுவேன் என்றும், எங்களை மிரட்டினார்.

இது மட்டும் இல்லாமல் எங்களின் மாற்று சான்றிதழை தந்துவிடுவேன் என்றும், மிரட்டுகின்றார். விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் அனைவரும் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து படிக்கின்றோம். இவர் இப்படி எங்களை மிரட்டுவதால் அஞ்சி நடக்கின்றோம். எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க விடுதியில் இருந்து வெளியே விடுவதில்லை.

நிறுவனத்தில் பயிலும் ஒரு மாணவி சக மாணவருடன் பேசியதை அவர் தவறாக நினைத்து கொண்டு அம்மாணவியை அவரது அறைக்கு தனியாக வரசொன்னார். அந்த மாணவி பயந்து கொண்டு உடன் தோழியையும் அழைத்து சென்றார். 2 மாணவிகளும் அவரது அறைக்குள் சென்றனர். அப்போது அந்த மாணவியின் தோழியை அவர் வெளியே அனுப்பி விட்டார்.

அந்த மாணவியிடம் முதல்வர் தகாத முறையில் பேசினார். மேலும் உனக்கும், அந்த மாணவருக்கும் என்ன தொடர்பு என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி, மாணவனிடம் சகஜமாக த்தான் பேசினேன் என்றார். அவர் மாணவியிடம் உன்னை பார்த்தாலே எனக்கே உணர்ச்சிகள் தோன்றுகின்றது என்றால், அந்த மாணவனுக்கு தோன்றாதா? என்று கேட்டு இருக்கிறார். இப்படிப்பட்ட மாணவிகளை பார்த்தாலே எனக்கு அவர்களை நிர்வாணமாக பார்க்க தோன்றும் என்று அந்த மாணவியிடம் கூறியுள்ளார்.

அந்த மாணவியை பார்த்து நீ ஒரு செம கட்டை என்று கூறியிருக்கிறார். அந்த பெண்ணிடம் நீ என்னை தினமும் தனியாக என் அறையில் வந்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த மாணவி மன்னிப்பு கேட்க முதல்வரின் காலில் விழுந்தாள். அப்போது அவரின் தலை முடி அவிழ்ந்து விட்டது. அதற்கு முதல்வர் என் முன்னாலேயே கொண்டை போடு என்றும் சொன்னார். கொண்டை போடும் போது, மேல் இருந்து கீழ் வரை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து இருக்கிறார்.

மேலும் மறுநாள் அந்த மாணவியை ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி வர சொன்னார். கடிதத்தை மாணவி கொண்டு சென்ற போது, முதல்வர் மாணவியிடம் நீ என் கணவில் இரவில் என் வீட்டிற்கே வருவது போல் தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டு மாணவி அங்கேயே அழுது விட்டார். மேலும் விடுதிக்கு வந்த மாணவி சக மாணவிகளிடம் கூறி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது என்று கூறியுள்ளார். அவளை பிற மாணவிகள் சமாதானம் செய்தனர். அதனை தொடர்ந்து ஒரு மாணவியின் மாமா முறை உறவினர் கடந்த புத்தாண்டு கல்லூரிக்கு வந்து மாணவியை பார்த்து விட்டு உணவு கட்டணம் செலுத்தி விட்டு சென்றார். அன்று மதியம் துணை விடுதி காப்பாளரான சந்தோசம் வந்தார். அவர் முதல்வரிடம் அந்த மாணவியும், அவரது மாமாவும் ஒரே அறையில் ஒன்றாக இருந்ததாக தவறான நோக்கத்தில் கூறினார்.

ஆனால் அந்த அறையில் அவர்கள் இருவருமே இல்லை. விடுதி காப்பாளர் விடுதியை பார்வையிட்டு வெளியே சென்ற போது அந்த அறையை திறந்து காட்ட சொன்னார். அதற்கு நாங்கள் திறந்து காட்டினோம். அப்போது யாருமே அந்த அறையில் இல்லை. அதற்கு அந்த காப்பாளர் முதல்வரிடம் சென்று தவறாக கூறிவிட்டார். அதற்கு முதல்வர் அந்த மாணவியிடம் விசாரிக்காமல் நேரடியாக அவரது தந்தைக்கு போன் செய்து வரசொன்னார். 4-1-2012 அன்று அந்த மாணவியும் அவரது தந்தையும் முதல்வரை பார்க்க சென்றார்கள்.

முதலில் மாணவியின் தந்தையை அழைத்து விடுதியை விட்டு அழைத்து செல்லுமாறு கூறிஇருக்கிறார். பின்னர் முதல்வர் அந்த மாணவியை தனியாக தனது அறைக்கு வர சொன்னார். அப்போது முதல்வர் அந்த மாணவியிடம் நீ உன் மாமாவுடன் இருக்கும் போது ஆடையுடன் இருந்தியா? இல்லையா? என்று கேட்டார்.

அடுத்ததாக நீ இந்த விடுதியை விட்டு வெளியே போ, நான் உனக்கு வெளியே அறை எடுத்து தருகிறேன் அல்லது என்னுடன் என் வீட்டில் தங்கி கொள் என்று கூறினார். பிறகு அந்த மாணவியிடம் ஒரு நாள்---- என்று தவறான நோக்கத்தில் பேசினார். இதற்கு இஷ்டம் இல்லை என்றால் சந்தோசம் வீட்டில் தங்கிகொள் என்றார்.

இதையடுத்து அந்த மாணவியும் காலில் விழ சொன்னார். அப்போது அந்த மாணவியிடம் உனக்கு உடல் நிலை சரியில்லை என்று கடிதம் எழுதி கொடுத்து விட்டு செல் என்றார். அவரும் எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டார். இதே போல் முதல்வர் பல மாணவிகளிடம் ஆபாசமாக கேள்விகள் கேட்டு தவறாக பேசிவருகிறார்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment