Sunday, January 29, 2012

யாழில் புதிய சிறைச்சாலை!

Sunday, January 29, 2012
இலங்கை::யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு பனை பகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்றவுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தலைமையில் இன்று பிற்பகல் 2.50 க்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள இந்த நிகழ்வில் அமைச்சர் சந்திரசிறி கஜதீர உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் கைதிகளின் அதிகரிப்பினால் ஏற்படுகின்ற இடப்பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் இப்புதிய சிறைச்சாலைக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

பருததித்துறை பிரதேசத்தில் அண்மையில் புதிதாக நீதிமன்றக் கட்டடத் தொகுதி ஆரம்பித்து வைக்கப்பட்டதை அடுத்து புதிய சிறைச்சாலை கட்டடமொன்றின் தேவை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர்கள் நாயகம் பீ. டபிள்யூ கொடிப்பிலி குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் சுமார் 800 கைதுகளுக்கான வசதிகளுடன் புதிய சிறைச்சாலை நிர்மாணப் பணிகளை அடுத்த வருட நடுப்பகுதிக்குள் நிறைவு செய்ய எண்ணியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment