Sunday, January, 01,2012
இலங்கை::தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், இந்த வருடத்தில் ஜனவரி மாதம் 17ம் திகதி முதல் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
மூன்று கட்டங்களாக இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன், தற்போது காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் குறித்த பேச ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்த போதும், காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் குறித்து கடந்த டிசம்பர் மாதம் முதலே பேச ஆரம்பித்தாக அவர் எமக்கு தெரிவித்தார்.
அத்துடன் காணி மற்றும் காவற்துறை அதிகார பகிர்வு தொடர்பில், ஜாதிக எலஉறுமய உள்ளிட்ட அரச தரப்பின் பலர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஒன்று குறித்து அரசாங்கத்துடன் பேசி வருவதாக சுதந்திரன் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் சாதகமான எதிர்பார்ப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை தேசிய பிரச்சினை தொடர்பில், அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவுதாகவும், அரசாங்க தரப்பில் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தையாக அல்லது வெற்றியளிக்கக்கூடிய பேச்சுவார்த்தையாக இருக்குமா? என, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் எமது செய்திப்பிரிவு வினவியது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, நீண்டகாலமாக அரசாங்கத்துடன் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை வருவதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த பேச்சுவார்த்தைக்கான திகதிகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் பேச்சுவார்த்தைகள் பலனற்றாக இருந்தால், அதனை நீடித்துக் கொண்டிருக்கும் எண்ணம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment