Thursday, December 1, 2011

சீர்திருத்தத்த அறிக்கைக்கு ரணில் மறுப்பு!

Thursday, December 01, 2011
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரை ஒன்றை ஆற்றவிருந்த போதும் அது இடம்பெறவில்லை

ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் உரை ஒன்றை நிகழ்த்தவிருந்த போது அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை
இதனையடுத்து சீர்திருத்தங்களுடன் அந்த உரையை மேற்கொள்ளமுடியும் என்று சபாநாயகரால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டது

இந்தநிலையில் இன்று ரணில் விக்கிரசிங்கவை உரையாற்றுமாறு சபையில் அழைப்பு விடுக்கப்பட்டது

இதன்போது கருத்துரைத்த ரணில் விக்கிரமசிங்க, தம்மை சீர்திருத்தங்களுடன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற செயலாளரே எழுத்துமூலம் கேட்டுள்ளதாக குறிப்ப்pட்டார்
எனினும் அதனை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அவர் தெரிவித்தார்

சபாநாயரால் சீர்திருத்ததங்களுடன் அறி;க்கையை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டால் மாத்திரமே தமது உரையை ஆற்றமுடியும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்

இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற பொதுச்செயலாளரால் இவ்வாறான அனுமதி வழங்கப்படுவது சாதாரண சம்பிரதாயம் என்று தெரிவித்தார்
எனினும் அதனை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்ளாமையால் நாடாளுமன்றத்தின் ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment