Friday, December 2, 2011

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 43 புலிகள் எதிர்வரும் 11ம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்-சந்திரசிறி கஜதீர!

Friday, December 02, 2011
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 43 புலிகள் எதிர்வரும் 11ம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப் படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்படும் 43 பேரும் எதிர்வரும் 9ம் திகதி சபை நடவடிக்கைகளை நேரில் பார்வையிடுவதற்காக பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். எதிர்வரும் 9ம் திகதி புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பின் குழு நிலை விவாத நாளாகும் என்று தெரிவித்த அமைச்சர், இதனை முன்னிட்டே 43 பேரும் பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்றார்.

புனர்வாழ்வு வழங்கப்பட்ட புலிகள் பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவது வரலாற்றில் முதற் தடவையாகுமென்றும் அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment