
தமிழ்த் தேசியக் (புலி) கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் சபையில் உரையாற்றுவதற்குக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் இன்று தடைவிதித்தார்.
வரவு செலவு திட்ட விவாதத்தில் அவர் இன்று இரண்டாவது தடவையாக உரையாற்றினார். இது தொடர்பில் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி அக்கிராசனத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனையடுத்தே ஒருவர் இரண்டாவது தடவையாகவும் உரையாற்ற முடியாது என்றும் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அனுமதிக்க முடியாது என்றும் குழுக்களின் பிரதித்தலைவர் அறிவித்தார்.
No comments:
Post a Comment