Monday, November 28, 2011இலங்கை வந்துள்ள ஜப்பானிய சமாதான தூதுவர் யசூசி அகாஷிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அலரிமாளிகையில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜீ.எல்.பீரிஸ், ஜனாதி பதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர், அட்மிரல் வசந்த கர்ணாகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெற்கு அபிவிருத்தி நெடுஞ்சாலையை திறந்து வைப்பதற்காக கடந்த சனிக்கிழமை ஜப்பானிய சமாதான தூதுவர் யசூசி அகாஷி இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment