
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேச்சாளர் பந்துல ஜயசேகரவிற்கும், சனல்4 ஆவணப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரான கெலம் மெக்லயாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் வைத்து இந்த கடுமையான வாயத் தர்க்கம் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரும், சனல்4 தயாரிப்பாளருடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மெக்லயார் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிற்கு சென்றிருந்ததாக பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
செனல்4 ஆவணப்படத்திற்கு எதிராக வெளியிடப்பட்ட ஆவணப்படம் மற்றும் ஏனைய இலங்கையின் பிரச்சார ஆவணங்கள் தொடர்பிலான தரவுகளை மெக்லாயர் திரட்டி வந்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமுற்ற தாம், மெக்லயாரை கடுமையான வார்த்தைகளினால் திட்டியதாக பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த வாய்த்தர்க்க சம்பவத்தை சனல்4 ஊடகக் குழுவினர் வீடியோ காட்சி எடுக்க முயற்சித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கை ஊடகவியலாளர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட காரணத்தினால் வீடியோ காட்சி எடுக்கும் முயற்சிகள் கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment