Thursday, September 29, 2011

கால அவகாசம் வேண்டும் - ஐ நாவிடம் இலங்கை கோரிக்கை!

Thursday,September, 29, 2011
கொழும்பு:பயங்கரவாதத்தை முறியடித்து மீள எழுச்சி பெற்று வரும் இலங்கையின் மேற்பாட்டுக்கான கால அவகாசத்தை பெற்றுக்கொடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்ற இலங்கைக்கான பிரதிநிதியான மனிஷா குணசேகர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கை ஒரு பல்கலாசார நாடாகும். அதேபோன்று இலங்கை ஒரு தீவு என்பதால் அது ஆரம்பகாலத்தில் இருந்து அந்னிய நாடுகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு வந்துள்ளது.

இதன் காரணமாகவே இலங்கை மக்கள் பொறுமை காப்பவர்களாக திகழ்கின்றனர்.

அதேபோன்று இலங்கை மக்கள் அனைவரும் சமாதானத்துடன் வாழக்கூடிய ஒரு மக்கள் சமூகமாகவும் உள்ளனர்

இந்த நிலையில் இலங்கை மக்கள் பெருமை கொள்ளும் வரலாற்றையும் சிறந்த கலாசாரத்தையும் கொண்டவர்களாக திகழ்வதாக இலங்கைக்கான பிரதிநிதியான மனிஷா குணசேகர குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment