Wednesday, August 31, 2011

வேலூர் சிறைச்சாலை முன்பாக பட்டாசு வெடித்த ம.தி.மு.க.,வினர் கைது!

Wednesday,August,31,2011
வேலூர்: வேலூர் சிறைச்சாலை முன்பாக பட்டாசு வெடித்த மதிமுக-வினரை போலீசார் கைது செய்தனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றசாட்டு, தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை நிறுத்த கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில்,சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என தமிழக சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், வேலூர் சிறைச்சாலை முன்பு கூடிய ம.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இது தொடர்பாக ம.தி.மு.க., மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment