Monday, August 29, 2011

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் நிலையங்களில் தமிழ்மொழியில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது-பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது!

Monday, August 29, 2011
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் நிலையங்களில் தமிழ்மொழியில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண பிரதேச மக்கள் இனி வரும் காலங்களில் தமிழ் மொழியிலேயே தங்களது முறைப்பாடுகளை பதிவுசெய்ய சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீல் தளுவத்த தெரிவித்துள்ளார்.

இதுவரையில் சிங்கள மொழியிலேயே பொலிஸ் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன. எனினும், தமிழ் மொழியில் முறைப்பாடுகளை செய்வதற்கு தேவையான படிவங்கள் தற்போது யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில்ல் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைச் செய்வதற்கு சிங்களம் தெரிந்த தரகர்களைப் பொலிஸ் நிலையங்களுக்குக் கூட்டிச்செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டது.

தற்போது இந்த புதிய திட்டத்தின் மூலம் பொது மக்கள் தமது பிரச்சினைகளைத் தமிழ் மொழியில் தாமே எழுதிக் கொடுத்து தீர்வு காணமுடியும்.

இடைத்தரகர்கள் இன்மையால் லஞ்சம் போன்ற குற்றச் செயல்கள் தவிர்க்கப்படுவதுடன், பொது மக்கள் நல்ல சேவையையும் பெற்றுக் கொள்ள வழி ஏற்படும் என்றும், இந்த புதிய திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பாரியளவில் நன்மை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment