Friday, August 19, 2011

வடக்கு வைத்தியசாலைகளை புனரமைப்பதற்கு அமெரிக்கா நிதி உதவி!

Friday, August 19, 2011
வடக்கின் வைத்தியசாலைகளை புனரமைப்பதற்கு அமெரிக்கா நிதி உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட ஒன்பது வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வைத்தியசாலை புனரமைப்பு குறித்து அறிவிக்கப்பட்டு;ள்ளது.

இரண்டு கட்டங்களாக வைத்தியசாலை புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியசாலைகளே இவ்வாறு புனரமைக்கப்பட உள்ளன.

முதல் கட்டத்தில் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களும், இரண்டாம் கடத்தில் 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வைத்தியசாலை புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முனைப்புக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment