Wednesday, August 31, 2011

ஐரின்‘சூறாவளியின் தாண்டவத்துக்கு அமெரிக்காவில் ரூ.58,000 கோடி நஷ்டம்!

Wednesday,August,31,2011
வாஷிங்டன் : அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மாநிலங்களை புரட்டியெடுத்த Ôஐரின்Õ சூறாவளி, கனமழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. சூறாவளி ஆடிய தாண்டவத்துக்கு ரூ.58,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 10 மாநிலங்களை சேர்ந்த 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கரீபியன் தீவில் உருவான Ôஐரின்Õ சூறாவளி, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதி மாநிலங்களை நேற்று முன்தினம் பயங்கரமாக தாக்கியது.

அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று சுழன்றடித்தது. நியூஜெர்சி, மேரிலேண்ட், விர்ஜினியா, வடக்கு கரோலினா, நியூயார்க், வாஷிங்டன், தல்வார் உள்ளிட்ட கடற்கரையோர மாநிலங்களில் கன மழை கொட்டியது. சூறாவளி தாக்கும் என்று கணிக்கப்பட்ட மாநிலங்களில் அவசர நிலையை அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். எனவே, மீட்பு மற்றும் நிவாரண படையினர் தயாராக இருந்தனர். கவர்னர்களுடன் சூறாவளி நிலவரம் குறித்து ஒபாமா தொடர்ந்து விசாரித்தார்.

பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் சாலை, ரயில், விமான போக்குவரத்து ரத்தானது. சென்னையில் இருந்து நியூயார்க் செல்ல வேண்டிய விமானங்கள் முன்பதிவு நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. அணு மின் நிலையங்கள், துறைமுகங்கள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. சூறாவளியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நேற்று 21 ஆக அதிகரித்தது.

பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், நீர் வடிந்த பிறகு உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சூறாவளி காற்றால் வீட்டுக் கூரைகள், மரங்கள் பிய்ந்து காற்றில் பறந்தன. வாகனங்கள் புரட்டி போடப்பட்டு சேதமடைந்தன. வெள்ளத்தில் கால்நடைகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல பகுதிகளில் மின் கம்பங்கள் விழுந்து மின்சாரம் தடைபட்டுள்ளதால் லட்சக்கணக்கான 40 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. ஐரின் சூறாவளி மற்றும் மழை வெள்ளத்துக்கு 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.58,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப நிலை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

கனடாவுக்கு குறி

அமெரிக்காவை புரட்டி போட்ட ஐரின் சூறாவளி, அந்த பகுதியில் வலுவிழந்த நிலையில் திசை மாறி கனடாவை நோக்கி மிரட்டி வருகிறது. அது முற்றிலும் செயலிழக்கவில்லை என்றும் கனடாவிலும் பலத்த மழை வெள்ளத்தை ஏற்படுத்தும் என்றும் அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. கனடா நகரங்களான நோவா ஸ்காடியா, நியூ பிரன்ஸ்விக் ஆகியவற்றில் நேற்று சில மணி நேரங்களில் 20 செ.மீ. மழை கொட்டியது. இதையடுத்து, அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment