Thursday, July 21, 2011
சென்னை: இலங்கையில், முகாம்களில் உள்ள தமிழர்கள் பிரச்னை குறித்து, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கவலையை பகிர்ந்து கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், மீண்டும் அவர்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்குச் செல்வதற்கான, புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.
சென்னைக்கு வருகை தந்த, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, கோட்டையில் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு, ஒரு மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பின் போது பல்வேறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். முதலில், தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்றதற்காக, ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஹிலாரி, "இந்தளவு வெற்றி, உலகின் எந்த அரசியல்வாதியையும் பொறாமைப்பட வைக்கும்' என்றார். மேலும், இதற்கு முன் முதல்வராக இருந்த போது, ஜெயலலிதா செய்த சாதனைகளை பாராட்டிய ஹிலாரி, இவ்வளவு பெரிய பிரபலத்தை சந்தித்துப் பேசுவதில் மிகவும் ஆர்வமாக இருந்ததாக தெரிவித்தார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வலுவான வர்த்தக உறவு இருப்பதையும், இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா திகழ்வதையும் குறிப்பிட்டார். இந்தியாவின் நடுத்தர வர்த்தக சந்தை இன்னும் வளரும் போது, வருங்காலங்களில் அமெரிக்காவின் இறக்குமதி சேவை, இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார். மேலும், தமிழகம், ஆட்டோ மொபைல் துறையில் பெரிய அளவில் வளர்ந்து வருவதால், இங்கு அமெரிக்கா முதலீடு செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்தார். தமிழகத்தில் அமெரிக்க முதலீடுகள் அதிகமாக செய்வதற்கு, பெருமளவு திறன் இங்கு உள்ளதாக ஹிலாரியும் தெரிவித்தார். திறன் மேம்பாட்டு முயற்சிகளை பொறுத்தவரை, "தமிழகத்தின் மனிதவளம் தான் மிகப் பெரிய முதலீடாக எப்போதும் இருந்து வந்துள்ளது. அதன் வளர்ச்சிக்கு கல்வி முக்கிய பங்கு வகிக்க உள்ளது' என்று, ஜெயலலிதா குறிப்பிட்டார்.
"தமிழகத்தில், 2011 முதல் 2020ம் ஆண்டுக்கு உட்பட்ட காலத்தில் ஒரு கோடியே 20 லட்சம் வேலைவாய்ப்பை தரும் அளவுக்கு, தகுதி உள்ளது. தற்போதுள்ள உயர்கல்வி மையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி மையங்கள், இதை உறுதி செய்ய, இன்னும் நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்கு, அமெரிக்க அரசும் தமிழக அரசும் இணைந்து, திறன் வளர்ப்பை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டால், தற்போதுள்ள தொழில் பயிற்சி மையங்களை மேம்படுத்த முடியும்' என்றார் முதல்வர்.
இதற்கு ஹிலாரி, "அமெரிக்கா மற்றும் தமிழகத்தில் உள்ள பயிற்சி மையங்கள் இடையே, பரிமாற்ற திட்டங்களை செயல்படுத்தலாம். மேலும், தமிழகத்தில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில், அமெரிக்க மாணவர்கள் உள்பயிற்சி எடுக்க வேண்டும்' என்று விருப்பம் தெரிவித்தார்.
"சாலை உள்கட்டமைப்பு சேவையில் அமெரிக்கா மற்றும் தமிழக அரசுகள் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன' என்று ஜெயலலிதா தெரிவித்தார். இதற்கு ஹிலாரி, "அமெரிக்காவின் அயல்நாட்டு தனியார் முதலீட்டுக் கழகம், தமிழகத்தில் முதலீடுகள் செய்ய அதிக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பெரிய முதலீடுகளை செய்வதற்கு அமெரிக்கா முயற்சிகள் மேற்கொள்ளும்' என்றும் உறுதியளித்தார்.
"சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் வழங்கப்படும், "எச்1பி' விசாக்களின் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்படும் 65 ஆயிரம் விசாக்கள் என்பது, வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாக உள்ளது. நிராகரிக்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, ஒரிஜினல் அளவான, ஒரு லட்சத்து 95 ஆயிரம் விசாக்களை வழங்கும் வகையில், எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்' என்று முதல்வர் வலியுறுத்தினார்.
இலங்கை தமிழர் விவகாரம் குறித்து, இருவரும் வெகு நேரம் பேசினர். "இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், யாழ்ப்பாணம் பகுதியில், இன்னும் தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களால், ஏற்கனவே வாழ்ந்த தங்களது வசிப்பிடங்களுக்கு திரும்ப முடியவில்லை' என்று, முதல்வர் ஜெயலலிதா கவலை தெரிவித்தார். கவலையை பகிர்ந்து கொண்ட ஹிலாரி, "இந்த தடையை முறியடித்து, முகாம்களில் உள்ள தமிழர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்புவதற்கான புதிய யுத்திகள் மற்றும் திட்டங்களை அமெரிக்கா வகுத்து வருகிறது' என்று பதிலளித்தார். அப்போது முதல்வர், "தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு, இங்குள்ள குடிமகன்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன' என்றார்.
அமெரிக்காவுக்கு வர அழைப்பு : சந்திப்பின் போது, "அமெரிக்காவில் உள்ள மாநிலங்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே மாநிலங்களுக்கு இடையேயான பொருளாதார மற்றும் தொழில் திட்டங்களை இணைந்து செயல்படுத்தலாம்' என்று ஹிலாரி விருப்பம் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவுக்கு வருகை தருமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்த ஹிலாரி," தமிழகத்தின் சாதனைகள் பற்றி அமெரிக்கர்கள் தெரிந்து கொள்ள, அந்த பயணம் உதவியாக இருக்கும்' என்றார்.
சூரிய சக்தி பூங்கா : ஹிலாரியிடம், முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, ""சூரிய சக்தி மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களில், நீண்ட கால அடிப்படையில் பெரிய அளவில் வாய்ப்புகளை தமிழகம் வழங்க முடியும். தமிழக அரசு, தலா, 300 மெகாவாட் திறன் கொண்ட, 10 சூரிய சக்தி பூங்காக்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு, 900 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு தேவை. அமெரிக்க நிறுவனங்கள் இதில் முதலீடு செய்ய வசதியாக, தமிழகம் மற்றும் அமெரிக்க அரசுகள் இணைந்து திட்டம் வகுக்கலாம்'' என்றார்.
துளிகள்...
* முதல்வர் ஜெயலலிதா, 3.40 மணிக்கு கோட்டைக்கு வந்தார். போர்டிகோவில் அவர் இறங்கியதும், அவரது கார் அங்கு நிறுத்தப்படாமல் எதிர்புறத்தில் நிறுத்தப்பட்டது.
* மாலை, 4.05 மணிக்கு, அமெரிக்க வெளியுறவு செயலர் ஹிலாரி கிளிண்டன், கோட்டைக்கு வந்தார். முதல்வர் கார் நிறுத்தப்படும், போர்டிகோவில் ஹிலாரியின் கார் நிறுத்தப்பட்டது. சாம்பல் நிறத்திலான, "லாண்ட் க்ரூசர்' காரில் ஹிலாரி வந்தார்.
* அவர் வருவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பே, அமெரிக்க பாதுகாப்புப் படையினர், கோட்டைக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
* ஹிலாரி வந்து இறங்கியதும், அவரை, தமிழக அரசின் பொதுத் துறை செயலர் குமார் ஜெயந்த், முதல்வர் அறைக்கு அழைத்துச் சென்றார். முதல் தளத்தில் உள்ள முதல்வரின் அறைக்கு, "லிப்ட்'டில் செல்லலாமென அழைத்த போது, வேண்டாமென மறுத்த ஹிலாரி, வேகமாக படியேறி மேலே சென்றார்.
* "லிப்ட்' வாசலில், ஹிலாரியை வரவேற்க காத்திருந்த முதல்வர் ஜெயலலிதா, அவர் படியேறி வந்ததை பார்த்ததும் அங்கு சென்று, அவரை வரவேற்று, தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.
* ஹிலாரியுடன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர், துணை தூதர் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். இரு வேன்களில், அமெரிக்க வெளியுறவுத் துறை அலுவலர்களும், மூன்று வேன்களில் அந்நாட்டு பத்திரிகையாளர்களும் வந்திருந்தனர்.
* முதல்வருடன் பேசிவிட்டு, சரியாக, 4.55 மணிக்கு, ஹிலாரி கீழே வந்தார். தன் அறைக்கு வெளியே வரை வந்து, முதல்வர் ஜெயலலிதா வழியனுப்பி வைத்தார். இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.
* பேட்டி தருமாறு ஹிலாரியை பத்திரிகையாளர்கள் அழைத்தனர். ஆனால், அவர்களை சந்திக்காமல், ஹிலாரி புறப்பட்டுச் சென்றார்.
* ஹிலாரி சென்ற சிறிது நேரத்தில், முதல்வர் ஜெயலலிதாவும் புறப்பட்டுச் சென்றார்.
* கோட்டையில் இருந்து புறப்பட்ட ஹிலாரி, நேராக மயிலாப்பூர் சென்றார். அங்கு வித்யா பாரதி திருமண மண்டபத்தில் உள்ள மகளிர் அமைப்புடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
* ஹிலாரியின் பாதுகாப்புக்காக அவருடன் அமெரிக்க பெண் பாதுகாப்பு படையினர் வந்திருந்தனர். அவரது கான்வாய் கார் ஓட்டுனர் கூட பெண்ணாக இருந்தார்.

No comments:
Post a Comment