Pages

Saturday, August 15, 2015

தேர்தலில் வாக்களிப்பதற்காக எந்தவித பயத்தையும் வாக்காளர்களுக்கு ஏற்படுத்தக்கூடாது: மஹிந்த தேசப்பிரிய!

Saturday, August 15, 2015
தேர்தலில் வாக்களிப்பதற்காக எந்தவித சந்தேகத்தையும் அல்லது பயத்தையும் வாக்காளர்களுக்கு ஏற்படுத்தக்கூடாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களை கட்டாயப்படுத்துவதற்கு எந்த தரப்பினருக்கும் அனுமதி இல்லை என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக இன்று காலை அத தெரண உடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணையாளர் இதனைத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார் முகங்கொடுக்கின்ற சவால்கள் இந்தமுறை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment