Pages

Saturday, August 15, 2015

ஜனாதிபதித் தேர்தலில் கடைசி கட்டத்தில் ஐமசுகூட்டமைப்பை தோல்வியடையச் செய்தது மைத்திரி: பெங்கமுவே நாலக தேரர்!

Saturday, August 15, 2015
முன்னாள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் எழுதப்படவில்லை என்றும் அது சிறிகொத்தவில் ஒருவரால் எழுதப்பட்டதெனவும் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தில் கட்சியை அழிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கடைசி கட்டத்தில் ஐமசுகூட்டமைப்பை தோல்வியடையச் செய்தது மைத்திரிபால சிறிசேன என தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொய் சொல்லிக் கொண்டு செல்வது தனக்கு அருவருப்பாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ இனவாதி என ஜனாதிபதியின் கடிதத்தில் உள்ளதாகவும் ஆனால் தமிழ் மக்களுக்கு போதுமான அளவு சேவையை மஹிந்த ராஜபக்ஷ செய்துள்ளதாகவும் அவர் இனவாதி என்றால் தாங்களும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்றும் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment