Pages

Saturday, August 15, 2015

தேர்தல் பணிகளுக்காக சுமார் 1,25,000 அரசாங்க ஊழியர்களை ஈடுபடுத்த திட்டம்!

Saturday, August 15, 2015
தேர்தல் பணிகளுக்காக சுமார் 1,25,000 அரசாங்க ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
வாக்குகளை எண்ணும் பணிகளில் சுமார் 70 ஆயிரம் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
நாளை மறுதினம் (17) நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 12,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பெட்டிகள் விநியோகம் நாளை (16) காலை ஆரம்பமாகவுள்ளது.
2015 பாராளுமன்றத் தேர்தலில் 1,50,44,490 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment