Pages

Friday, June 13, 2014

புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான வாய்ப்பை ஐநாவுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்: UNP!!

Friday, June 13, 2014
இலங்கை::இலங்கை அரசாங்கம்- கே.பி என்றளைக்கப்படும் குமரன் பத்மநாதன்  அல்லது செல்வராசா பத்மநாதன் மற்றும் கருணா எனப்படும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது குற்ற விசாரணைகளை மேற்கொண்டு தமது பொறுப்புக் கூறலை ஆரம்பிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசனை கூறியுள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இந்த இரண்டு பேரும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கொலை முயற்சி ஆகியவற்றுடன் தொடர்புபட்டவர்களர்கள் எனவும் ஐக்கியதேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான வாய்ப்பை ஐநாவுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ள ஐக்கிய தேசிக் கட்சி, அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைப்பதற்கான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கப்படாவிட்டால் அது அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதாக அமைந்துவிடும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவுறுத்தியுள்ளது. இவற்றின் மூலம் சர்வதேச விசாரணையில் இலங்கை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் வகை செய்ய முடியும் எனவும் ஐக்கிய தேசியக்கட்சி குறிப்பிட்டுள்ளதாக கொழும்பில் வெளியான செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment