Pages

Tuesday, June 17, 2014

அலுத்கம பிரதேசத்தில் கலவரம் இடம்பெறும் என எதிர்பார்க்கவில்லை: காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன்!

Tuesday, June 17, 2014
இலங்கை::அலுத்கம பிரதேசத்தில் கலவரம் இடம்பெறும் என எதிர்பார்க்கவில்லை என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
 
பொதுபல சேனா இயக்கத்தினால் நடத்தப்பட்ட பேரணியின் பின்னர் கலவரம் வெடிக்கும் என காவல்துறையினர் கருதவில்லை என காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா பேரணியை நடத்தினால் வன்முறைகள் இடம்பெறக் கூடுமென காவல்துறையினரிடம் சிலா எச்சரிக்கை விடுத்திருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பேரணி குறித்து பொதுபலசேனாவுடனும், முஸ்லிம்களுடனும் பேசப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அப்பொழுது அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முழுக்க முழுக்க சமய நோக்கத்திலான பேரணியே நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உறுதி மொழி காரணமாக பொதுமக்களின் பாதூப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்ற அடிப்படையில் நீதிமன்றில் தடையுத்தரவு பெற்றுக்கொள்ளப்படவில்லை என காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கலவரம் வியாபிக்காமல் இருப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, பௌத்த பிக்குகள் சம்பவத்தில் கொல்லப்பட்டதாகவும், பௌத்த பிக்குகள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்;கப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தவே இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் துப்பாக்கிச் சூட்டக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment