Pages

Tuesday, June 17, 2014

காங். அரசு நியமித்த கவர்னர்கள் ராஜினாமா செய்யுங்கள் - சுப்பிரமணியன் சுவாமி!

Tuesday, June 17, 2014
புதுடெல்லி::கேரளா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 6 மாநில கவர்னர்களை மாற்றுவதில் மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு முன்னிப்பாக செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. "காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியினால் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் உடனடியாக அவர்களாகவே பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அவர்கள் தகுதிக்காக நியமிக்கப்படவில்லை. சோனியாவால் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கேரளா மாநில கவர்னர் ஷீலா தீட்சித் உள்பட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நியமித்த கவர்னர்களை மாற்ற மத்தியில் உள்ள மோடி அரசு விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து அங்கு 15 ஆண்டுகளாக டெல்லி முதல் மந்திரியாக இருந்த ஷீலா தீட்சித் கேரளா கவர்னராக நியமிக்கப்பட்டார்.

மேற்குவங்க கவர்னர் எம்.கே. நாராயணன், ராஜஸ்தான் கவர்னர் மார்க்ரெட் ஆல்வா ஆகியோர் பதவியில் இருந்து விலகிக்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. குஜராத் மாநில கவர்னர் கமலா பெனிவால், மராட்டிய மாநில கவர்னர் சங்கர நாராயணன், திரிபுரா மாநில கவர்னர் தேவேந்திர கொன்வார் ஆகியோரும் ராஜினாமா செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2004ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதா அரசு நியமித்த கவர்னர்களை நீக்க எடுத்தால் முக்கிய அரசியல் மோதல் ஏற்பட்டது. பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்ரீம் கோர்ட்டை நாடினார். சுப்ரீம் கோர்ட்டு 2010ம் ஆண்டு மே மாதம் கூறிய தீர்ப்பில் கவர்னர்கள் மத்திய அரசின் பணியாளர்கள் இல்லை அவர்களை தன்னிச்சையான முறையில் நீக்க முடியாது. கவர்னர்கள் தவறான செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நீக்கம் செய்ய முடியும் என்று கூறியது.
காங்கிரஸ் அரசு நியமித்த கவர்னர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment