Pages

Tuesday, June 17, 2014

சென்னை இலங்கை தூதரகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முற்றுகை!

Tuesday, June 17, 2014
சென்னை::இலங்கை – அளுத்கம, பேருவலை, தர்கா நகர், களுத்தரை உள்ளிட்ட இலங்கையின் தென்பகுதியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இன்று காலை 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

புலி பயங்கரவாதத்தை அழித்த இலங்கை அரசு பொது பல சேனா பயங்கரவாதிகளை கண்டும் காணாமல் இருப்பதை வண்மையாக கண்டிக்கின்றோம் என்று குறிப்பிட்ட ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களுக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரணம் வழங்குவதுடன் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேதர் என்பவரை உடனடியாக கைது செய்து உயர்ந்தபட்ச தண்டனை வழங்குவதோடு,
 
 பயங்கரவாத பொது பல சேனா அமைப்பை இலங்கை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment